ETV Bharat / state

"மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை" - சென்னை ஆணையர் - laws are needed to prevent cow rearing

மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை என சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

"மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை" சென்னை ஆணையர்

author img

By

Published : Aug 10, 2023, 5:00 PM IST

"மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை" - சென்னை ஆணையர்

சென்னை: மாடுமுட்டியதில் படுகாயமடைந்த சிறுமி :சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர், ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9)எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹர்சின் பானு, அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்றபோது, அவ்வழியாக 7 மாடுகள் சென்ற நிலையில், அதில் ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதை பொருட்படுத்தாத மாடு சிறுமியை குத்தி தூக்கிய நிலையில் இருந்தபோது பிரம்பால் மாட்டை அடித்து துரத்தி உள்ளனர்.

மாடு குத்தி தூக்கிவிசியதில் படுகாயமடைந்த சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.

மாட்டின் உரிமையாளர் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு: இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் மாட்டின் உரிமையாளர் விவேக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் 2 மாடுகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்துச் சென்று தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் மாட்டின் உரிமையாளருக்கு விதித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் கால்நடையினால் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன.

மேலும், மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், சாலைகளில் கால்நடைகளால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணமாக உள்ளது.

எங்கே சென்றது மனித நேயம்: மாடு முட்டியதில் நிலைகுலைந்த சிறுமி வழியால் துடித்தது ஒருபுறம், தன் மகளைக் காப்பாற்ற செய்வதறியாது திக்கி தடுமாறிய தாய் மறுபுறம் என இருந்த இக்கட்டான சூழலில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த சிலரோ தங்களுக்கு தெரிந்த யுக்திகளை பயன்படுத்தி சிறுமியை மீட்க முயற்சித்த நிலையில், அவர்களுக்குப் பக்க பலமாகவோ அல்லது அபாயத்தில் இருக்கும் சிறுமியை மீட்க வேண்டும் என்ற எண்ணமோ துளியும் இல்லாமல் யாருக்கு என்ன ஆனால் நமக்கு என்ன என்பதைப் போல பத்திரமாய் வீட்டின் கேட்டிற்குப் பின்னால் ஒருவர் நின்றுகொண்டு, நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.

மனித நோயத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டு வீட்டிற்குள் திரும்பிச் சென்ற சிலரைப் பார்க்கும் பொழுது எங்கே சென்றது மனித நேயம் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் சிலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

''மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை"

இது குறித்து விளக்கம் அளித்த, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், "நகர்ப்புற வாழ்விடப் பகுதிகளில் மாடுகள் வளர்க்க அனுமதியில்லை. ஆனால், மாடு வளர்ப்பவர்கள் சிலர் அது, எங்களின் வாழ்வாதாரம் என்று கூறி சிலர் சென்னை வாழ்விடப் பகுதிக்குள், மாடுகள் வளர்த்துக் கொண்டு வருகின்றனர். நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு மாடு வளர்க்க 36 சதுர அடி இடம் இருக்கவேண்டும். மாடுகளை சாலைகளில் திரிய விடக் கூடாது. மீறினால், அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் கைப்பற்றுவார்கள். இதுதான் இப்போதைக்கு அமலில் இருக்கும் சட்டமாக உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி மாடுகளை நாங்கள் கைப்பற்றி வந்தாலும் ஓரிரு நாட்களில் ரூ.2000 அபராதம் செலுத்திவிட்டு மாட்டை அழைத்துச் சென்றுவிடுகின்றனர். எனவே, நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை. சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் தான் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை சிறுமியை முட்டித்தள்ளிய மாட்டைக் கைப்பற்றியுள்ளோம். மாடு கண்காணிப்பில் இருக்கிறது. ஒருவேளை அதற்கு வெறிநோய் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்காணித்து வருகிறோம். மாட்டின் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மாடு வளர்ப்போர் நலச் சங்கம் ஆதரவாக வந்தாலும்கூட சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் வலுவாக எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி பறக்கும் முத்தம் விவகாரம்... ஆதாரமில்லை எனத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.