ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு - உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் - madras high court

Former Admk Minister Rajenthra Balaji : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ரவீந்தரன் என்பவர் ஆடியோ ஆதாரங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Nov 24, 2021, 6:08 PM IST

சென்னை: ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் (Madras High court) வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்கள் கடந்த முறை நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, " வேலை மோசடி புகார் தவிர, கொலை திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் ஒரு தொடர் குற்றவாளி" என்று தெரிவித்தார்.

மேலும் இரு வழக்கிலும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர்கள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதால், அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இடையீட்டு மனுதாரர்கள் மனுத்தாக்கல் செய்ய நீதிபதி அனுமதி அளித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று (நவ.24) இடையீட்டு மனுதாரர் ரவீந்திரன் சார்பில் ஆடியோ ஆதாரங்களுடன் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று மனு தாக்கல் செய்தார். அதில், ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் விஜய நல்லதம்பியிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள், ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து காவல்துறை தரப்பு வாதத்திற்காக, வழக்கு விசாரணை நவம்பர் 31ஆம் தேதி ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்ற உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழப்பு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.