தமிழ்நாட்டில் நாளை அமல்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கு தொடர்பாக தொழிற்துறை, வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே. 9) ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மே 11ஆம் தேதி முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருவதாக ஸ்டெர்லைட் ஆலை உறுதியளித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை 70 மெட்ரிக் டன்னாக உயர்த்த கோரியுள்ளோம்.
கோரிக்கையை பரிசீலித்து ஓரிரு நாளில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார். தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்திடவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க : கரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ. 533 கோடி ஒதுக்கீடு!