ETV Bharat / state

புதிய மின் இணைப்பு பெறும் விவகாரம்: டான்ஜெட்கோவின் உத்தரவுக்கு இடைக்கால தடை!

author img

By

Published : Oct 22, 2020, 1:45 PM IST

Updated : Oct 22, 2020, 2:09 PM IST

டான்ஜெட்கோவின் உத்தரவுக்கு இடைக்கால தடை
டான்ஜெட்கோவின் உத்தரவுக்கு இடைக்கால தடை

13:41 October 22

சென்னை: புதிய மின் இணைப்பு பெற கட்டிட பணிகள் முடிந்ததற்கான சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவைத் திரும்பப் பெற்ற தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிலங்களில் உரிய அனுமதியின்றி கட்டிட பணிகள் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், அந்த கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்கக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கு, கட்டிட பணிகள் முடிந்ததற்கான சான்றிதழை கட்டாயமாக்கி, கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில், புதிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட பணி முடிந்ததாக சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்த, கள அலுவலர்களுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு பிறப்பித்து சில மாதங்கள் கடந்த நிலையில், அதைத் திரும்பப் பெற்று, கடந்த 6ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வினியோக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் அதன் செயலாளர் கதிர்மதியோன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. அதனால், கட்டிட பணி முடிப்பு சான்று கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆணையை ரத்து செய்து, புதிய இணைப்புக்கு கட்டிட பணி முடிந்தது என்ற சான்று கட்டாயம் என்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் பார்த்திபன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மின் இணைப்பு பெற கட்டுமான பணி முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை, எக்காரணமும் இல்லாமல் திரும்பப் பெற்றுள்ளதாகவும், இந்த உத்தரவு சட்டவிரோத கட்டுமானங்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய மின் இணைப்புகளுக்கு கட்டிட பணி முடிப்பு சான்று கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க...புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு!

Last Updated : Oct 22, 2020, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.