ETV Bharat / state

ஜெய், அதர்வா படத்திற்கு தடை விதித்து உத்தரவு!

சென்னை: நடிகர் ஜெய் நடித்துள்ள 'பலூன்' திரைப்படத்தை தெலுங்கு மொழியிலும், நடிகர் அதர்வாவின் '100' திரைப்படத்தை டிவி, இணையதளங்களிலும் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

chennai HC
author img

By

Published : Aug 3, 2019, 10:28 PM IST

அதர்வா நடித்த '100' திரைப்படத்தை தயாரித்த எம்.ஜி.ஆர் சினிமாஸ் நிறுவனம், 'பலூன்' படத்தின் வெளியீட்டு உரிமைக்காக தர வேண்டிய தொகையில் ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அத்தொகையை தராமல் '100' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் 70 எம்.எம்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கடந்த மே மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி '100' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரி '100' படத் தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆர் சினிமாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 15ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாயை கொடுத்து விடுவதாக அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஏற்று, '100' படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை எனவும், 'பலூன்' படத்தை தெலுங்கில் வெளியிட முயற்சிப்பதால், அதற்கு தடை விதிக்கவும், '100' படத்தை தொலைக்காட்சியிலோ, அமேசான் போன்ற இணையதளங்களிலோ வெளியிட தடைவிக்க வேண்டுமென 70 எம்.எம். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை எம்.ஜி.ஆர் நிறுவனம் நிறைவேற்ற தவறியதால் 'பலூன்' படத்தை தெலுங்கிலும், '100' படத்தை தொலைக்காட்சி, அமேசான் போன்ற பிற தளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், 70 எம்.எம். நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ஒரு கோடி ரூபாயை செலுத்தும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Intro:Body:நடிகர் ஜெய் நடித்துள்ள பலூன் திரைப்படத்தை தெலுங்கு மொழியிலும், நடிகர் அதர்வாவின் 100 திரைப்படத்தை டிவி மற்றும் இணையதளங்களிலும் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அதர்வா நடித்த 100 திரைப்படத்தை தயாரித்த எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம், பலூன் படத்தின் வெளியீட்டு உரிமைக்காக தர வேண்டிய தொகையில் ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அத்தொகையை தராமல் நூறு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என 70 எம்.எம்.எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கடந்த மே மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி நூறு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தடையை நீக்கக் கோரி நூறு படத் தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆரா சினிமாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 15ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாயை கொடுத்து விடுவதாக அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஏற்று, நூறு படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை எனவும், பலூன் படத்தை தெலுங்கில் வெளியிட முயற்சிப்பதால், அதற்கு தடை விதிக்கவும், 100 படத்தை தொலைக்காட்சியிலோ, அமேசான் போன்ற இணையதளங்களிலோ வெளியிட தடைவிக்க வேண்டுமென 70 எம்.எம். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை எம்.ஜி.ஆரா நிறுவனம் நிறைவேற்ற தவறியதால் பலூன் படத்தை தெலுங்கிலும், 100 படத்தை தொலைக்காட்சி அல்லது அமேசான் போன்ற பிற தளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டனர்.

மேலும், 70 எம்.எம். நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ஒரு கோடி ரூபாயை செலுத்தும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.