திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் ஆலயத்தில் 1982ஆம் ஆண்டு ஐம்பொன் நடராஜர் சிலை கடத்தப்பட்டது.
இந்நிலையில், 37 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அடிலெய்ட் (Adelaide) பகுதியிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் அச்சிலை இருப்பது தமிழ்நாடு சிலை தடுப்புப் பிரிவினருக்குத் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேல் தலைமையில் ஆஸ்திரேலியாவிலிருந்து நடராஜர் சிலை மீட்கப்பட்டு தற்போது சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.