ETV Bharat / state

'கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்டுங்க!' - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

State ensure mines not to be encroachment, MHC

author img

By

Published : Jun 30, 2021, 8:20 PM IST

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளிடமிருந்து கிரானைட் வளங்களைப் பாதுகாக்கக்கோரி ஜி. சரவணன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் தனிப்பட்ட விரோதம் காரணமாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனிப்பட்ட விரோதம் இருந்தாலும், ஆக்கிரமிக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் அரசு நிலமாக இருப்பதால் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

கிரானைட் கொள்ளை எங்கு நடைபெற்றாலும் அதற்கு முடிவுகட்ட வேண்டும் எனவும், கிரானைட் வளங்களைப் பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினர்.

மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் நேரில் ஆய்வுசெய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.