ETV Bharat / state

பேருந்துப் பயணத்திற்கான ரூ.1000 பாஸ் விநியோகம் தொடக்கம்

சென்னை: மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக அனைத்துப் பேருந்து மையங்களிலும் செப்டம்பர் மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் மாதாந்திர பயண அட்டை விநியோகம் தொடங்கியது.

Start of Rs.1000 pass distribution for bus travel

author img

By

Published : Sep 2, 2020, 6:39 PM IST

கரோனா பரவலைத் தடுக்க தடை செய்யப்பட்ட பொதுப்போக்குவரத்து நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வினையடுத்து, நேற்று (செப்டம்பர் 1) முதல் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

இது குறித்து நேற்று (செப்.1) போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசும்போது, 'மொத்தமுள்ள 22 ஆயிரம் பேருந்துகளில் தற்போது ஆறாயிரத்து 90 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புறநகர் பேருந்துகளில் 32 பயணிகளுடனும், நகரப் பேருந்துகளில் 34 பயணிகளுடனும் பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1000 மாதாந்திர பயண அட்டை அனைத்து பேருந்து மையங்களிலும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 2) அனைத்துப் பேருந்து மையங்களிலும் செப்டம்பர் மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் மாதாந்திர பயண அட்டை வழங்கப்பட்டது. தகுந்த இடைவெளியைப் பின்பற்ற தரையில் வட்டம் வரையப்பட்டதையடுத்து, அரசு வழிகாட்டுதலின்படி பயண அட்டையை மக்கள் வாங்கிச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.