சென்னை கோபாலபுரம் இல்லத்திலுருந்து நாளை காலை 11 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை திமுக தலைவர் வெளியிடவுள்ளார் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அடுத்த கட்ட பரப்புரையை தொடங்கவுள்ளார். "உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின்" என்ற தலைப்பில் 29ஆம் தேதி கோபாலபுரத்திலிருந்து அடுத்தக்கட்ட பரப்புரையை ஸ்டாலின் தொடங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார். நாளை காலை 11 மணி அளவில் மறைந்த தலைவர் கலைஞர் இல்லமான கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று கூறப்படுகின்றது.
திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள தேர்தல் பரப்புரை குறித்தான அறிவிப்பாக இருக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தலவல் தெரிவிக்கின்றன.