இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதனால், நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து, மெட்ரோ ரயில் ஆகியவை நாளை இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தடுப்பு மருந்து அளிப்பதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி மருந்து, சோப்பு உள்ளிட்டவை அடங்கிய பெட்டகத்துடன் விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரமும் வழங்கினார்.
இதையும் படிங்க: நாளை மட்டும் டாஸ்மாக் மூடல்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு