ETV Bharat / state

அரசின் கரோனா பணிகளை விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் குறித்து கவலை இல்லை - ஓ.பி.எஸ் தாக்கு! - மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வு

சென்னை : தமிழ்நாடு அரசு கரோனா நோய்யை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக ஆற்றவேண்டிய உடனடி பணிகளைப் பற்றி கவலைப்படாமல் தேவையில்லாத சர்ச்சைகளை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கிளறுவது கண்டிக்கத்தக்கது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Stalin is not concerned about the people criticizing the coronation of the state - OPS attack
அரசின் கரோனா பணிகளை விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு மக்களைக் குறித்து கவலை இல்லை - ஓ.பி.எஸ் தாக்கு!
author img

By

Published : Apr 26, 2020, 12:46 PM IST

தமிழ்நாடு அரசின் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அண்மையில் திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கரோனா தடுப்புப் பணியில் உலகமே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 15ஆவது நிதிக்குழுவிடம் இருந்து தமிழ்நாடு அரசு என்ன பெற்றுள்ளது என்பது குறித்து தேவையில்லாத சர்ச்சையை எதிர்க்கட்சி தலைவர் கிளறி உள்ளார். பிப்ரவரி 14 அன்று நான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், 2020-2021ஆம் ஆண்டில் 15ஆவது நிதிக் குழுவின் முதல் அறிக்கையினால் தமிழ்நாட்டிற்கு என்ன சாதகங்கள் மற்றும் என்ன பாதகங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து தெளிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிட்டிருந்தேன்.

அதில் மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகக் குறைக்குமாறு நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயிலிருந்து இனி பங்கு அளிக்கப்படாது என்பதைக் கருத்தில் கொண்டால், மொத்த நிதிப்பகிர்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைப்பினால், மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயில் பெரும் பாதிப்பு இருக்காது. மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4.023 சதவீதத்திலிருந்து 4.189 சதவீதமாக, சிறிய அளவே உயர்ந்துள்ளது. கடந்த சில நிதிக்குழுக்களின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து குறைந்து வந்த போக்கு, இந்த உயர்வினால் மாற்றம் அடைந்துள்ளது. ஆனாலும், கடந்தகால அநீதிகளுக்கு, அதிலும் குறிப்பாக பதினான்காவது நிதிக்குழு இழைத்த பாதிப்புகளுக்கு இது முழுமையான பரிகாரமாகாது. எனவே, தமிழ்நாடு போன்ற சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலத்திற்கு சரியான கணக்கீடுகள் மூலம், போதிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் பதினைந்தாவது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து மீண்டும் வலியுறுத்துவோம்.

இதிலிருந்தே, தமிழ்நாட்டிற்கு வரிவருவாயில் சிறிதளவில் கூடுதல் பங்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அது முன்பு இருந்த நிலையில் ஒரு நல்ல முன்னேற்றம் என்பதையும், அதே நேரத்தில் இந்த கூடுதல் பங்கு முன்பு ஏற்பட்ட அநீதிகளை முழுமையாக களையவில்லை என்பதையும் தொடர்ந்து அரசு நிதிக் குழுவின் முன் தன் குரலை எழுப்பும் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். இந்த நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. நான் நிதிநிலை அறிக்கையில் கூறியதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு, நான் அந்த நேரத்தில் மத்திய அரசை விமர்சித்ததாகவும், தற்போது நிலை மாறிவிட்டேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்வது முற்றிலும் தவறான ஒரு கூற்று ஆகும்.

தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக வருவாய் பற்றாக்குறை மானியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறேன். தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பதினைந்தாவது நிதிக்குழு, தமிழ்நாட்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 4,025 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ளது. எனினும், மத்திய அரசின் ‘நடவடிக்கை அறிக்கையில்’, நிதிப்பகிர்விற்குப் பின்னரான வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்குவது தொடர்பான நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதற்கென மொத்தமாக, 74,340 கோடி ரூபாய்யை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் இம்மானியத்திற்காக 30,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மானியத் தொகையை முழுமையாகப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்பதை மாநில அரசு வலியுறுத்தும். இதிலிருந்து 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் காரணமாக என்ன நன்மை ஏற்பட்டுள்ளது என்பதும் மத்திய நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாதது ஆகிய இரண்டு கருத்துகளும் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன. எனவே, நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்டவாறு வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழ்நாடு பெறவேண்டிய முழு தொகையையும், இந்த ஆண்டுக்குள் அரசு தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

2019-2020ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசு வரவு செலவு திட்டத்தில் மதிப்பிட்ட தமிழ்நாட்டின் வரிவருவாயின் பங்குத் தொகை திருத்திய மதிப்பீடுகளில் குறைந்து விட்டதை சுட்டிக் காட்டியிருந்தேன். மேலும், முந்தைய ஆண்டு இந்தியக் கணக்காயர் மற்றும் தணிக்கைத் துறை தலைவரால் சான்றளிக்கப்பட்ட இறுதி வருவாய் ஈட்டலின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில் விடுவிக்க வேண்டிய தொகைகள் சரி செய்யப்படும். அந்த அடிப்படையில் தான் 2019-2020ஆம் ஆண்டு (14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரை காலத்தின் இறுதி ஆண்டு) திருத்திய மதிப்பீடுகளில் தமிழ்நாட்டிற்கு வரப்பெறவேண்டிய வருவாய் பங்குத் தொகை குறைந்துவிட்டது. இதற்கும் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

இந்த அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ளாமலேயே எதிர்க்கட்சித் தலைவர் தேவையில்லாத, எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் ஒருபொழுதும் அநீதி ஏற்படக்கூடாது என்பதுதான் எங்களின் கொள்கை. அந்தக் கொள்கையிலிருந்து நாங்கள் சிறிதும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம் என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை 2020-2021ஆம் ஆண்டில் 15ஆவது நிதிக்குழு பரிந்துரையின் மீது தமிழ்நாடு அரசு தனது நிலையை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் கேள்விகளுக்கு நான் ஏற்கனவே தெளிவாக பதிலளித்த நிலையில் மேலும் சில கேள்விகளை அவர் தற்போது வினவியுள்ளார். என்னுடைய அறிக்கையில் மக்கள்தொகை, பரப்பளவு, வருமான இடைவெளி போன்ற தமிழ்நாட்டிற்கு வலு சேர்க்காத காரணிகளுக்கு அதிக மதிப்பீடுகள் வழங்குவதன் காரணமாக நமக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை வலியுறுத்தி இது குறித்து நிதிக்குழுவிற்கு ஒரு கோரிக்கை மனுவினை அரசு தயார் செய்து வருகிறது என்று குறிப்பிட்டும், தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை 15ஆவது நிதிக்குழுவிடம் சரியாக எடுத்துரைத்து தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை தொடர்ந்து நிலை நிறுத்துவோம் என தெரிவித்துள்ள பின்னரும் இதுபோன்ற வினாக்கள் எழுப்பப்படுவது வேதனை அளிக்கிறது.

Stalin is not concerned about the people criticizing the coronation of the state - OPS attack
அரசின் கரோனா பணிகளை விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு மக்களைக் குறித்து கவலை இல்லை - ஓ.பி.எஸ் தாக்கு!

இந்திய நாடும், தமிழ்நாடும் கொடூரமான கரோனா நோய்யை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக ஆற்றவேண்டிய உடனடி பணிகளைப் பற்றி கவலைப்படாமல் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட பிரச்னைகள் குறித்து தேவையில்லாத சர்ச்சைகளை மீண்டும் மீண்டும் கிளறுவது கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் அரசு எப்பொழுதும் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழக மக்களின் நலன்களையும் யாருக்காகவும், யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வருகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.