தேர்தல் ஆணையத்திடம் திமுக தமிழ்நாடு முழுவதும் 9500 கடைகளில் விளம்பரப் பதாகைகளை வைக்க அனுமதி கேட்டிருந்தது, அதற்குத் தேர்தல் ஆணையம் திமுகவிற்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், "'ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தரப்போறாரு' விளம்பரப் பதாகை வைப்பதற்கு, விளம்பரம் தொடர்பான உண்மைத்தன்மை அனைத்திற்கும் அந்த விளம்பரத்தை வெளியிடுபவர்தான் (திமுக) பொறுப்பாக வேண்டும். கடைகளில் விளம்பரப் பதாகை வைப்பதற்குச் சான்றிதழ் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் பெற வேண்டும்.