ETV Bharat / state

‘பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்க!’ - ஸ்டாலின்

சென்னை: பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய ஆளும்கட்சி பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

stalin
author img

By

Published : Jun 25, 2019, 10:07 PM IST

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரோட்டில் இரண்டு பத்திரிக்கையாளர்களை ஆளும் கட்சியினர் தாக்கியது கண்டனத்திற்குரியது என்றும், சமீபகாலமாக செய்திகளை சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை உடனடியாக ஆய்வு செய்து களையப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தாமதமின்றி மடிக்கணினி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஜனநாயக ரீதியில் போராடிய மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது காட்டுமிராண்டித்தனம் என கண்டித்துள்ள அவர், பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய ஆளும்கட்சி பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Intro:Body:

ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கும்

அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிக்கையாளர்களை

ஆளும் அ.தி.மு.க.வினர் கண்மூடித்தனமாகத்  தாக்கியதற்கு கடும் கண்டனம்!

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்அறிக்கை

ஈரோடு நகரத்தில் பள்ளிமாணவ மாணவிகளுக்கு மடிக்கணிணிவழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்திசேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள்திரு.கோவிந்தராஜ் (இந்து தமிழ் திசை)மற்றும் திரு.நவீன் (ஜூனியர் விகடன்)ஆகியோரை ஈரோடு மேற்குத் தொகுதிசட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் மகனும், மற்றும் பலஅ.தி.மு.க.வினரும் கண்மூடித்தனமாகத் தாக்கியதற்கு எனது கடும் கண்டனத்தைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தாக்குதலை அங்குநின்ற ஈரோடு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன்,காவல்துறை ஆய்வாளர் பன்னீர்செல்வம்ஆகியோர் கை கட்டி வேடிக்கை பார்த்து -விழாவில் பங்கேற்ற சட்டமன்றஉறுப்பினர்களான கே.வி.ராமலிங்கம்,தென்னரசு ஆகியோரின் ஆதரவாளர்கள்என்ன வேண்டுமானாலும் அராஜகமும்,அடிதடியும் செய்யட்டும் என்று பாதுகாத்துசெயலிழந்து நின்றது அதிர்ச்சியளிக்கிறது.

பத்திரிக்கைச் சுதந்திரத்தைநசுக்கும் வகையில் இப்படியொருமனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தி,மடிக்கணிணி வழங்கவில்லை என்றுஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்தியமாணவ, மாணவிகளின் உயிருக்கும்அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருப்பதுகாட்டுமிராண்டித்தனத்தின் உச்சகட்டமாகும்! 

மடிக்கணினி வாங்கிவதில்பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாகச்செய்திகள் வருகின்றன. இந்த நிலையில்தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்குமடிக்கணிணி வழங்குவதில்  அ.தி.மு.க. அரசுபல்வேறு குளறுபடிகளைச் செய்வதால்,ஆங்காங்கே பள்ளி மாணவர்கள்தன்னெழுச்சியான போராட்டங்கள் நடத்திவருகிறார்கள். அந்த குளறுபடிகளை நீக்கி,மாணவர்களுக்கு முறையாக மடிக்கணிணிவழங்குவதற்குப் பதிலாக -  செய்திசேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களைக்கடுமையாகத் தாக்கி, அ.தி.மு.க. சட்டமன்றஉறுப்பினர்களும், ஆதரவாளர்களும்ரவுடித்தனம் செய்திருப்பது அநாகரிகமானது.சமீபகாலமாக போராட்டச் செய்திகளைச்சேகரிக்கச் செல்லும்பத்திரிக்கையாளர்களை அ.தி.மு.க.வினர்தாக்குவதும் - அந்தத் தாக்குதலைகாவல்துறை அதிகாரிகள் அனுமதிக்கும்வகையில் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும்தொடர் கதையாகி வருவதுகவலையளிக்கிறது.

எனவே, இந்து தமிழ் திசைபத்திரிக்கை மற்றும் ஜூனியர் விகடன்நிருபர்கள்  மீது தாக்குதல் நடத்திய சட்டமன்றஉறுப்பினரின் மகன் உள்ளிட்டஅ.தி.மு.க.வினர் அனைவர் மீதும் சட்டப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்து,அவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்றும், தாக்குதல் நடத்தஅனுமதித்து வேடிக்கை பார்த்த டி.எஸ்.பி.,இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும்  பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும்கேட்டுக் கொள்கிறேன். 

மடிக்கணிணி வழங்கும்திட்டத்தில் உள்ள குளறுபடிகள் எவையெனஉடனடியாக ஆய்வுசெய்து அவற்றைக்களைந்து, அனைத்து மாணவமாணவியர்க்கும்  மடிக்கணிணிதாமதமின்றிக் கிடைப்பதை அ.தி.மு.க. அரசுஉறுதி செய்ய வேண்டும் என்றும்வலியறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

***

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.