இந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில், சென்னை தியாகராய நகரில் ஆசிய - அரேபிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் தொடக்க விழா நேற்று (பிப்.17) நடைபெற்றது.
கஜகஸ்தான், மலேசியா, தாய்லாந்து நாட்டின் தூதர்கள் இணைந்து தொடங்கிவைத்த இந்நிகழ்வில், பிரபல தொழிலதிபரும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன தலைவருமான ஸ்ரீனிவாசனும் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா வர்த்தகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறந்த உற்பத்தி நாடாக இந்தியா மாறி வருகிறது. அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் குறைகளே இல்லை.
இந்தியா சிறந்த சந்தை என்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும், சேவை வழங்கவும் இந்தியாவுக்கு வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: டூல்கிட் என்றால் என்ன?...போலீஸ் ஏன் அதை வேவு பார்க்கிறது?