ETV Bharat / state

புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

புனித வெள்ளியை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் கரோனா வழிகாட்டுதலின்படி இன்று காலை சிறப்புப் பிரார்த்தனையும், சிலுவைப்பாதையும் நடைபெற்றன.

Special worship in churches on the eve of Good Friday

author img

By

Published : Apr 2, 2021, 10:20 AM IST

சென்னை: கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் தவக்காலத்தைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறும், அதன் பின்னர், இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்வாகவும், சிலுவைப்பாடுகளின்போது அவர் முன்மொழிந்த வார்த்தைகள் குறித்து தியானிக்கவும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று காலை சிறப்புப் பிரார்த்தனையும், சிலுவைப்பாதையும் கரோனா வழிகாட்டி நெறிகளின்படி நடைபெற்றது.

இதனையொட்டி சென்னை சாந்தோம், பாரிஸ், சின்னமலை, எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை ஆலயங்களில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சிறப்புப் பிரார்த்தனை, வழிபாடுகள் நடைபெற்றன.

முன்னதாக புனித வெள்ளி வழிபாடுகள், பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி நடைபெறும் என கிறிஸ்தவ சபை அறிவித்திருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.