ETV Bharat / state

கோடைகாலத்தில் சிறப்பு ரயில்கள்...! தென்னக ரயில்வே அறிவிப்பு - south indian railway

சென்னை: கோடைகால விடுமுறையில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Special trains
author img

By

Published : Mar 7, 2019, 7:22 PM IST

கோடை காலத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்கு மக்கள் பயணம் செய்ய முதலில் தேர்ந்தெடுப்பது ரயில் சேவையைத்தான்.

ஏனென்றால், ரயிலில் மட்டும்தான் பயணச்சீட்டு விலை குறைவு, பயணம் செய்யும் அலுப்பு தெரியாமல் இருப்பதால் ரயில்களில் பயணிக்கிறார்கள்.

இதனால், கோடை காலங்களில் சொந்த ஊருக்குச் செல்பவர்களும், சுற்றுலா செல்பவர்களும் ரயில் சேவையை முதலில் தேர்ந்தெடுப்பதால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரலிலிருந்து எர்ணாகுளத்துக்கும், திருவனந்தபுரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்: ஏப்ரல் 5, 12, 19, 26 மற்றும் மே 3, 10, 17, 24, 31 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்: ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

சென்னை எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில்: மே 6ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் .

சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில்: ஏப்ரல் 5, 12, 26 மே 3, 10, 17, 24, 31 தேதிகளில் எழும்பூரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும்.

நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்: ஏப்ரல் 7, 14, 21, 28 மே 5, 12, 16, 19, 26 தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.35 மணிக்கு எழும்பூர் சென்றடையும்.

எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்: ஏப்ரல் 7, 14, 21, 28 மற்றும் மே 5, 12, 19, 26 தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

திருச்சி - எர்ணாகுளம் சிறப்பு ரயில்: ஏப்ரல் 13ஆம் தேதி திருச்சியிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

undefined

சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

கோடைக் காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க  சிறப்பு ரயில் சேவைகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா செல்வதற்கும் மக்கள் பெரிதும் தேர்வு செய்வது ரயில் சேவைகளைத்தான். டிக்கெட் கட்டணமும் குறைவு, அலுப்பு தெரியாமல் பயணம் இவைகள்தான் ரயில் நிலையங்களை மக்கள் மொய்க்க வைக்கிறது.இதனை கருத்தில் கொண்டும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னை சென்ட்ரலில் இருந்து எர்னாகுளத்திற்கும் ,திருவனந்தபுரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது ;

சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்  ஏப்ரல் 5,12,19,26 & மே 3,10,17,24,31 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றுஅடையும் .

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ஏப்ரல் 18-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றுஅடையும் .

சென்னை எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில்  மே 6-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து  மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு தூத்துக்குடி சென்றுஅடையும்  .

சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் ஏப்ரல் 5 ,12 ,26 ,மே 3,10,17,24 ,31 தேதிகளில் எழும்பூரில் இருந்து மாலை  6.50 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும் .

நெல்லை - சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 7,14,21,28,மே 5,12,16,19,26 தேதிகளில் மாலை  6.15 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் காலை 5.35 மணிக்கு எழும்பூர் சென்றடையும் .

எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஏப்ரல் 7,14,21,28 & மே 5,12,19,26 தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து  இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் .

திருச்சி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் 13 ஏப்ரல் அன்று திருச்சியிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.