கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைச் சந்தைகளுக்கு கொண்டுவர தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பார்சல் ரயில் சேவை இயக்கப்படுகிறது.
ஏப்ரல் 9 முதல் 25ஆம் தேதிவரை இந்தச் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் பார்சல் சேவை மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையிலிருந்து நாகர்கோவில், கோவை, டெல்லி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் எட்டு நாள்களுக்கு ரயில் சேவைகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சல் ரயில்களின் விவரம்:
- வண்டி எண்: 00657 எழும்பூர் - நாகர்கோவில்
- வண்டி எண்: 00658 நாகர்கோவில் - எழும்பூர்
- வண்டி எண்: 00653 எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் - கோவை
- வண்டி எண்: 00654 கோவை -
எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் - வண்டி எண்: 00655 திருவனந்தபுரம் - கோழிக்கோடு
- வண்டி எண்: 00656 கோழிக்கோடு - திருவனந்தபுரம்
- வண்டி எண்: 00646
எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் - டெல்லி - வண்டி எண்: 00647 டெல்லி -
எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம்ல்
அனைத்து சிறப்பு பார்சல் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: சுற்றுலா வந்த ரஷ்ய நபருக்கு தங்குமிடம் உணவு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்!