சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் டெங்கு கொசு புழுக்கள் அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான கொசு மருந்து அடிக்க 17 லட்சம் வீடுகளை, சுமார் 500 வீடுகள் கொண்ட சிறு வட்டங்களாக (Sector) பிரிக்கப்பட்டு, மண்டலம் மற்றும் வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது.
மேலும் இனி வரும் காலங்களில், மாநகராட்சி சார்பில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிகாரிகளுக்கு வழிமுறைகள் குறித்துத் தெரிவித்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தற்போது டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
இந்தப் பணிகளை மேற்கொள்ள 3,317 களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகள், சுமார் 500 வீடுகள் கொண்ட சிறு வட்டங்களாக (Sector) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு பணியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
வாரந்தோறும் கொசுப்புழு வளர வாய்ப்புள்ள இடங்களான , மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள இதர தேவையற்ற பொருள்கள்) ஆகியவற்றைக் கண்டறிந்து அகற்றியும், கொசு புழுக்கள் இருப்பின் அதனை அழிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி செய்து வருகிறது.
மேலும், சிறப்பு நடவடிக்கையாகப் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு நல சங்கப் பிரதிநிதிகளுக்கு டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பருவ காலங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு நோய்கள் இருப்பின் கண்டறிந்து மருந்துகள் வழங்க
நடவடிக்கை எடுக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்” என தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு சென்னையின் சிறுவன் உயிரிழந்த நிலையில், நேற்று புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு பொறியியல் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கும்பகோணத்தில் 3 நபருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்து வருடின்றனர்.
பொது மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உபதைகளை கண்டறிந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிக்ச்சை பெறுமாறு மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி!