தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் “புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில், தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் ( Designated Polling Station Locations ) இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவின்படி, வரும் 13, 14 ஆகிய நாள்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் இம்முகாமினைப் பயன்படுத்தி தங்களது மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நீர்நிலைகளைப் பாதுகாக்க புகைப்படங்களை எடுத்துப் பதிவேற்ற வேண்டும்'