ETV Bharat / state

மிஸ்டர் கிளீன் டிராஃபிக் போலீஸ் பணி நிறைவு விழா.. கவனத்தை ஈர்த்த அடேங்கப்பா கேக்..! - Completion Ceremony

சென்னையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியின் 38 ஆண்டுகால பணி நிறைவு பாராட்டு விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட வித்தியாசமான கேக் வெட்டப்பட்டது.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணி நிறைவு விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த கேக்

author img

By

Published : Jun 5, 2023, 12:21 PM IST

போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணி நிறைவு விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த கேக்

சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் 1986ல் சென்னை மாநகர காவல் துறையில் காவலராக பணிக்குச் சேர்ந்து தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர் எனப் பதவி உயர்வு பெற்றார். பின் சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையில் 2005 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிக் கடந்த மே 31 ஆம் தேதி வரை 38 ஆண்டுகள் பணியாற்றினார்.

மேலும் காவல் துறையில் சிறு தண்டனை இல்லாமல் கடைசி வரை சிறந்த முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்ற நன்மதிப்பைப் பெற்றவர் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி. இவருடன் பணியாற்றிய சக காவலர்கள் மற்றும் அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய அனைத்து காவலர்கள் அனைவரும் பணி நிறைவு பாராட்டு விழா நடத்தினர். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அதில் 38 ஆண்டுகள் காவல்துறை நிறைவை கேக் வெட்டி சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக வித்தியாசமான கேக்கைப் போக்குவரத்து ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியின் இளைய மகளான தீப நிவாஷினி ஏற்பாடு செய்திருந்தார். அந்த கேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அது மட்டுமல்லாமல் கேக்கில் உருவாக்கப்பட்ட மாநகர காவல் இலச்சினை (logo) ஆகியவை இடம்பெற்று இருந்தது.

இதையும் படிங்க: Karunanidhi 100: கருணாநிதி நூற்றாண்டு விழா.. உட்லண்ட்ஸ் தியேட்டரில் 'பராசக்தி' ரீ ரிலீஸ்.. நடிகர் பிரபு மகிழ்ச்சி!

மேலும், போக்குவரத்து காவல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பாதுகாப்பு விதி முறைகள், சாதனங்கள், துப்பாக்கி தோட்டாக்கள், பெல்ட், தொப்பி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதைச் சோதிக்கும் கருவி (Breath Analysis Tool), காவல் துறை லத்தி, போக்குவரத்து விதி மீறல் அபராத ரசீது சாலை விதிமுறைகள் பின்பற்ற வைக்கப்படும் கோன் ஆகிய அனைத்தும் கேக் வடிவில் உருவாக்கப்பட்டு இருந்தது.

இதனைக் கண்டு காவல் ஆய்வாளரின் பணி நிறைவுப் பாராட்டு விழாவுக்குப் பாராட்ட வந்த உயர் அதிகாரிகள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குறிப்பாக ஆவடி மாநகர் காவல் போக்குவரத்து துணை ஆணையாளர் ஜெயலட்சுமி IPS அவர்கள் கேக்கை கண்டு அசந்து போனார். தந்தையின் பணி நிறைவு விழாவில் வித்தியாசமான கேக்கை கொண்டு வந்து அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்று உள்ளது.

இதையும் படிங்க: "பயணிகளின் கனிவான கவனத்திற்கு" அரசுப் பேருந்தில் வெளியாகும் அறிவிப்பு : பொதுமக்கள் வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.