ETV Bharat / state

வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மூன்று நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது

மூன்று நாட்கள் தொடர் விடுமுறையொட்டி  வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

author img

By

Published : Aug 12, 2022, 10:24 PM IST

சென்னை: கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 ந் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில், கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணம் குறித்த விவரங்கள் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.4,000 வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.3870 மதுரைக்கு ரூ.3000 வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் சமானிய மக்கள் அரசு பேருந்து சேவையை தான் நம்பி உள்ளனர்.

வழக்கமாக கோயம்பேட்டில் இருந்து தினசரி 1950 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும். இந்நிலையில் இன்றும், நாளையும் சேர்த்து 610 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் இன்று கோயம்பேட்டில் இருந்து 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் மேலும், நாளை 185 பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:தேசியக்கொடியுடன் பால் பாக்கெட் ஆவினில் விநியோகிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.