ETV Bharat / state

கரோனா பாதிப்புள்ளவர்கள் வாக்களிக்க தனி ஏற்பாடு; மாநகராட்சி தேர்தல் அலுவலர் பிரகாஷ்

சென்னை: உடல் வெப்பநிலை அதிகமுள்ள வாக்காளர்களும், கரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 5, 2021, 8:13 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’சென்னை மாவட்டத்திற்குள்பட்ட 16 தொகுதிகளில் 1,061 இடங்களில் 5,911 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நாளன்று பணிபுரிய 28,372 மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளுக்கான 14,276 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,095 கட்டுப்பாட்டு கருவிகள், 7,984 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் இயந்திரங்கள் (VVPAT), பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பல்வேறு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தொடா வெப்பநிலைமானி மூலம் வாக்காளர்களை பரிசோதிக்கவும், வாக்காளர்கள் கைகளை முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்யவும், ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வலது கையில் அணிந்து கொள்ள பாலித்தீன் கையுறைகள் (Disposable Polyethylene Hand Gloves), வாக்குச்சாவடியில் பணியில் உள்ள அலுவலர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய தனியே சானிடைசர்கள், முகக்கவசங்கள் (Face Shield) மற்றும் சர்ஜிகல் முகக்கவசம் (Surgical Face Mask), ரப்பர் கையுறை (Single Use Rubber Gloves) வழங்கப்படும்.

மேலும், வாக்காளர்களின் உடல் வெப்பநிலை சராசரிக்கு மிக அதிகமாக இருப்பவர்கள், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இருப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கும், வாக்குச் சாவடியில் உள்ள அலுவலர்களுக்கும் முழு பாதுகாப்பு கவச உடை (PPE Kit) போன்ற கரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்கான 13 வகையான பொருள்கள் தனியே ஒரு அட்டைப்பெட்டியில் வழங்கப்பட உள்ளன.

1,061 வாக்குச்சாவடி அமைவிடங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிபுரிய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் முழுவதுமாக மகளிர் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பு ஏற்பாடுகளுடன் கூடிய வாக்குச்சாவடி ஒன்றும், மாதிரி வாக்குச்சாவடி நான்கும் அமைக்கப்பட்டுள்ளது.

30 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 577 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 2467 இதர வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3074 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான, மிகவும் பதற்றமான 607 வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள சீட்டு (Booth Slip) வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள சீட்டு கொண்டு வர இயலாத நபர்கள் வாக்குச்சாவடியில் உள்ள நிலைய அலுவலரை அணுகி தங்களது வாக்குச்சாவடி மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களின் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தலாம். இந்த தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் அவரது கடமையிலிருந்து மீறாமல் சிறப்பாக பணியாற்றிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.