ETV Bharat / state

தண்ணீர் லாரி உரிமையார் சங்கத்தினரோடு எஸ்.பி வேலுமணி ஆலோசனை - எஸ்பி வேலுமணி

சென்னை: தண்ணீர் விநியோகிப்பதில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினரோடு ஆலோசனை நடத்தினார்.

எஸ்.பி வேலுமணி
author img

By

Published : Jun 25, 2019, 8:03 AM IST

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திக்கேயன், மாநகர கூடுதல் காவல் ஆனையர் அருண், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சியாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி,

"தமிழ்நாட்டில் 142 வருடங்களாக இல்லாத தண்ணீர் பஞ்சம் 2017இல் வந்த போது சென்னைக்கு 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது நீர் நிலைகள், குவாரிகள் என்று அனைத்து இடங்களிலும் தண்ணீர் பெறப்பட்டு 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநோயகிக்கப்பட்டு வருகிறது. இதில், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சார்பில் 6000 தண்ணீர் லாரிகள் இயங்கிவருகின்றன. நாள் ஒன்றுக்கு 18 ஆயிரம் முறை பயணம் செய்து தண்ணீர் விநியோகித்து வருகின்றனர். இவர்கள் வெகு தொலைவில் சென்று தண்ணீர் எடுத்து வருவதால் கூடுதல் லாபத்தை வைத்து தண்ணீர் விநியோகிக்கன்றனர்.

எனவே அவர்களிடம் தமிழ்நாட்டில் மிகுந்த தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறைந்த லாபத்துடன் சேவை மனப்பான்மையில் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது.

ஒன்று அல்லது இரண்டு இடங்களில்தான் அதிக லாபத்துக்கு தண்ணீர் விநியோகிப்பதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் குழு அமைத்து அதிக கட்டணம் வசுலிப்பதை தடுத்து வருவதாகவும் கூறினார்கள். எனவே அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் மக்கள் லாரி உரிமையாளர்களின் குழுவுக்கோ அல்லது மெட்ரோ குடிநீர் வாரிய தலைவரிடமோ புகார் அளிக்கலாம்.

அதன் பேரில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் சேகரிப்பு அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருப்பதை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளோம். மழைநீரை வீநாக்காமல் வீடுகள் அலுவகங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை பொருத்தி மழைநீரை சேமிக்க வேண்டும்" என்றார்.

Intro:Body:தண்ணீர் விநியோகிப்பதில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினரோடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையாளர் கார்த்திக்கேயன், மாநகர கூடுதல் காவல் ஆனையாளர் அருண், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவடங்களின் ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றன்ர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, “இரண்டு நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் தனியார் தண்ணீர் லாரிகள் இயல்பை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக செய்தியாளர்கள் கூறினார்கள். இதுபற்றி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரோடு உள்ளாட்சி துறை அமைச்சர் கல்ந்து பேசி தீர்வு காண்பார் என்று கூறியிருந்தார். அதண்டிப்படையில் இன்று அவர்களோடு மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். தமிழகத்தில் 142 வடுடங்களாக இல்லாத தண்ணீர் பஞ்சம் 2017 இல் வந்த போது சென்னைக்கு 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது நீர் நிலைகள், குவாரிகள் என்று அனைத்து இடங்களிலும் தண்ணீர் பெறப்பட்டு 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சார்பில் 6000 தண்ணீர் லாரிகள் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு 18 ஆயிரம் முறை பயணம் செய்து தண்ணீர் விநியோகித்து வருகின்றனர். இவர்கள் வெகு தொலைவில் சென்று தண்ணீர் எடுத்து வருவதால் கூடுதல் லாபத்தை வைத்து தண்ணீர் விநியோகிக்க நேருகிறது. எனவே அவர்களிடம் தமிழகத்தில் மிகுந்த தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறைந்த லாபத்தை வைத்து தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என்றும் சேவை மனப்பான்மையில் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. அதிக லாபத்துக்கு தண்ணீர் விநியோகிப்பது ஒன்று, இரண்டு இடங்களில் மட்டும் தான் மற்றபடி அனைத்து இடங்களிலும் நியாயமான விலையில் தான் தண்ணீர் விநியோகிப்பதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் குழு அமைத்து அதிக கட்டணம் வசுலிப்பதை தடுத்து வருவதாகவும் கூறீனார்கள். எனவே அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் மக்கள் லாரி உரிமையாளர்களின் குழுவுக்கோ அல்லது மெட்ரோ குடிநீர் வாரிய தலைவரிடமோ புகார் அளிக்கலாம். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைநீர் சேகரிப்பு அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருப்பதை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளோம். இன்று மழை பொழியும் காலம் வந்துள்ளது. எனவே மழைநீரை வீநாக்காமல் மக்கள் பூமிக்கு அடியுஇல் சேமிக்கும் மழைநீர் சேமிக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து அனைவரும் ர்தங்கள் வீடுகள் மற்றும் அலௌவகங்களிலும் பொருத்தி மழைநீரை சேமிக்க வேண்டும்.

தண்ணீர் விநியோகிப்பதில் அம்மாவின் அரசு தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஸ்டாலின் கூறூம் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது அம்மா தான். அவர்கள் ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதே போல் அவர்கள் ஆட்சி கால்த்தில் இன்னொரு கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டத்தில் 25 சதவிகிதம் மட்டுமே முடிவடைந்திருந்தது. 2011 இல் ஆட்சி பொறுப்பேற்றவுடம் அம்மா தான் அதனை முழுமையாக முடித்துவைத்தார். எல்லா பெரிய திட்டங்களையும் அம்மாவுடைய அரசுதான் கொண்டுவந்துள்ளது. வேலூர், மேலூர், விருதுநகரில் இரண்டு திட்டம், பல்லடம் திட்டம் என்று அனைத்தையும் அம்மாவினுடைய அரசு தான் கொண்டுவந்தது. 656 கோடி திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் கூட்டு குடிநீர் திட்டம் 2014 ஆம் ஆண்டு அம்மா சட்டமன்றத்தில் அறிவித்து நிறைவேற்றப்பட்டது. இன்று அது முடியும் தருவாயில் உள்ளது. தி.மு.க ஆட்சி கால முடிவில் மற்றும் அம்மாவிடைய ஆட்சி காலத்திலும் மொத்தமாக 4900 மில்லியன் லிட்டர் தன்ணீர் தான் விநியோகிக்கப்பட்டது. இன்றைக்கு 2400 மில்லியன் லிட்டர் தண்ணீர் கூடுதலாக விநியோகித்து வருகிறோம். தற்போது மழை இல்லாத காரனத்தால் 350 மில்லியன் லிட்டர் குறைவாக அளிக்கபட்டு வருகிறது. 2400 மில்லியன் லிட்டர் தண்ணீரை கூடுதலாக வழங்க முடிகிறது என்றால் அது சிறப்பான திட்டங்கள் செயலப்டுத்தியதன் மூலமே. எனவே இந்த நேரத்தில் நாங்கள் கொண்டு வந்தோம் நீங்கள் கொண்டு வந்தோம் என்ற அரசியலுக்க்குள் நான் போக விரும்பவில்லை.

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அம்மா அறிவித்த கூடுதலான 150 மற்றும் 400 மில்லியன் லிட்டர் தண்ணீருக்காக முதல்வரும் டெல்லி சென்றிருந்த போது பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். நானும் வலியுறுத்தியுள்ளேன். ஏற்கெனவே அம்மாவும் 3 முறை டெல்லி சென்று அந்த திட்டங்களை வலியுறுத்தினார். அந்த வகையில் 400 மில்லியன் லிட்டருக்கு நிதி பெறப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது சென்னைக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பதே ஏற்படாது. அதேபோல் கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு கழிவுநீரை தூய்மைப்படுத்தும் திட்டம் வரவுள்ளது. இந்த 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு ஏற்கெனவே அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 40 மில்லியன் லிட்டர் தண்ணீர் நமக்கு குடிநீராக அளிக்கப்படும். எனவே குடிநீர் பிரச்னையை போக்கியே ஆக வேண்டும் என்று பல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.