ETV Bharat / state

நாங்குநேரியில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் - திருநாவுக்கரசர் - தென்னக ரயில்வே எம்பிக்கள் கூட்டம்

சென்னை: நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர்
author img

By

Published : Sep 9, 2019, 10:52 PM IST

தென்னக ரயில்வேயின் பொது மேலாளருடன் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் வேலையில்லாமல் பலர் இருக்கும்போது வட மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். முக்கிய ரயில்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நின்று செல்லவேண்டும்.

காரைக்குடி - திருவாரூர் ரயில் பாதை பணிகள் முடிந்தும் ரயில்கள் இயக்கப்படவில்லை. அப்பகுதியில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து பயணிகள் நெரிசலை குறைக்க வேண்டும். ரயில்வே வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது தகுதியானவர்களை பணியமர்த்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை பொது மேலாளரிடம் கூறியுள்ளேன்.

திருநாவுக்கரசர் பேட்டி

சிதம்பரம் கைது செய்யப்பட்டதிலிருந்து தற்போதுவரை பல கட்டங்களாக காங்கிரஸ் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பழிவாங்கும் நோக்கில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிட்ட நாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என அந்த மாவட்ட தலைவர் கோரிக்கை வைப்பதில் தவறில்லை. இது குறித்து இறுதி முடிவை கட்சித் தலைமை எடுக்கும்”, என்றார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.09.19

சிதம்பரம் கைது தொடர்பாக பல கட்ட போராட்டங்களை காங்கிரஸ் நடத்தியுள்ளது.. திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி..

தென்னக இரயில்வே எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் பேட்டியளித்த திருநாவுக்கரசர் எம்.பி, தமிழகத்தில் வேலை இல்லாமல் பலர் இருக்கும் போது வட மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். முக்கிய ரயில்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நின்று செல்ல வேண்டும். காரைக்கு - திருவாரூர் மார்க்கத்தில் பணிகள் முடிந்தும் ரயில்கள் இயக்கப்படவில்லை. அப்பகுதியில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து பயணிகள் நெரிசலை குறைக்க வேண்டும். செல்லப்பட்டுள்ள கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஜி.எம் சொல்லியுள்ளார். ரயில்வே பட்ஜெட்டிற்கு ரயில்வே வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது தகுதியானவர்களை பணியமர்த்த வேண்டும். சிதம்பரம் கைது செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை வல கட்டங்களாக காங்கிரஸ் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆட்களை எண்ணாதீர்கள், இது உணர்வு ரீதியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பழிவாங்கும் நோக்கில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என அந்த மாவட்ட தலைவர் கோரிக்கை வைப்பதில் தவறு இல்லை. இது குறித்து இறுதி முடிவை கட்சித் தலைமை எடுக்கும். கூட்டணி கட்சிகளிடம் பேசி முடிவு செய்யும் என்றார்..

tn_che_04_southern_railway_meeting_thirunavukkarasar_mp_byte_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.