ETV Bharat / state

தீபத்திருவிழா: மதுரை - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் - திருக்கோவிலூர்

கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மதுரை - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை - திருவண்ணாமலை சிறப்பு ரயில்

author img

By

Published : Dec 5, 2022, 10:45 PM IST

Updated : Dec 5, 2022, 10:55 PM IST

மதுரை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை - விழுப்புரம் மதுரை விரைவு ரயில்களின் சேவை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.

மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரையிலிருந்து அதிகாலை 04.05 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்திற்கு வழக்கமாக காலை 11.15 மணிக்கு வந்து சேரும். பின்பு விழுப்புரத்திலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.05 மணிக்கு திருவண்ணாமலை சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து மதுரை விரைவு ரயில் (16867) மாலை 03.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 04.25 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும். விழுப்புரத்திலிருந்து வழக்கமாகப் புறப்படும் நேரமான மாலை 04.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த நீட்டிக்கப்பட்ட சேவை ரயிலானது விழுப்புரம் - திருவண்ணாமலையிடையே திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தேனியில் மதுபானக்கடையினை அடைக்கக்கோரி நூதனப்போராட்டம்

Last Updated : Dec 5, 2022, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.