ETV Bharat / state

தீபாவளி ஸ்பெஷல் - ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, 23 கூடுதல் பெட்டிகளை இணைக்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
author img

By

Published : Nov 13, 2020, 6:01 PM IST

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பயணம் செய்யும் மக்கள் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் மக்கள் அதிக அளவில் கூடாமல் தவிர்க்க தென்னக ரயில்வே ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது.

அதன்படி இன்று (நவ. 13), நாளை (நவ. 14) என இரண்டு தினங்களுக்கு 7 வெவ்வேறு ரயில்களில், 23 கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்கவுள்ளதாக தென்னக ரயில்வே தகவல் தெரிவித்திருந்தது. தொடர்ந்து இன்று (நவ. 13) சென்னை எழும்பூர்- செங்கோட்டை ரயிலில் 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், எழும்பூர்- நாகர்கோவில் ரயிலில் 3 மூன்று படுக்கை வசதி பெட்டிகளும், எழும்பூர்- திருநெல்வேலி ரயிலில் 1 பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், எழும்பூர்- சென்ட்ரல் சிறப்பு ரயிலில் மேலும் 1 ரயில் பெட்டி இணைக்கப்படும். நாளை (நவம்பர் 14 ஆம் தேதி), செங்கோட்டை- சென்னை எழும்பூர் ரயிலில் 4 பெட்டிகளும், செங்கோட்டை- எழும்பூர் சிறப்பு ரயிலில் 1 பெட்டியும், நாகர்கோவில்- எழும்பூர் ரயிலில் 6 பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (நவ. 14) சென்னை கோட்டத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு நிலையங்கள் காலை 8 மணி முதல், மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.