சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று (மே.26) இரவு 7.15 மணிக்கு ராமேஸ்வரம் புறப்பட வேண்டிய ரயில், மூன்று மணி நேரம் தாமதமாக இரவு 10.15 மணிக்குப் புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல இன்று (26.5.2021) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் பாம்பன் பாலப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து நேரம் மாற்றியமைக்கப்பட்டு புறப்படும் ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு :
1. ராமேஸ்வரத்தில் இருந்து வண்டி எண் 06852, ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சென்றடையும் சிறப்பு ரயில் இன்று (மே.26) மாலை 5.10 மணிக்கு புறப்பட இருந்தது. இந்நிலையில் அந்த ரயில் முப்பது நிமிடம் தாமதமாக மாலை 5.40 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளது.
2. ராமேஸ்வரத்தில் இருந்து வண்டி எண் 05119, ராமேஸ்வரம் - மாண்டுயாடிஹ் செல்லும் சிறப்பு ரயில் இன்று (மே.26) இரவு 11.55 மணிக்கு புறப்பட இருந்தது. இந்த சிறப்பு ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக, நள்ளிரவு 12.20 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
இதையும் படிங்க : தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதலமைச்சர்