சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நாளை (பிப்.10) நடைபெறவிருப்பதால் அந்த வழியாகச் செல்லும் 19 ரயில்கள் ரத்த செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாவது:
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 07.50 மணி முதல் மதியம் 02.35 மணி வரை ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்ப்யப்படுகிறது.
இதன்படி சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இருமார்க்கத்திலும் செல்லும் 19 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் முடிந்தபிறகு சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி முதல் மதியம் 02.00 மணிக்கும், மறுமார்க்கமாக 02.10 மணிக்கும் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.