சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட, தொலைக்கட்சித் தொடர் கலைஞர்கள், பின்னணி குரல் கலைஞர்கள் சங்கம் டப்பிங் யூனியனின் உறுப்பினராக இருந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் நினைவாக அவரது பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ தொடங்கப்பட்டுள்ளது.
'எஸ்பிபி ஸ்டுடியோ' சங்கத் தலைவர் டத்தோ ராதாரவி தலைமையில், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
சென்ற மாதம் பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தியபோது, அவரது நினைவாக டப்பிங் ஸ்டுடியோ நிறுவப்படும் என்று ராதாரவி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.