ETV Bharat / state

தமிழகம் வரும் பிரதமர் மோடி.. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் யார் வரவேற்பை ஏற்றுக்கொள்வார்?

தமிழகம் வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி வரவேற்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் ஓபிஎஸ்ஸும் வரவேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 8, 2023, 11:56 AM IST

சென்னை: இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று(ஏப்ரல் 8) தமிழகம் வரவுள்ளார். புதிய விமான நிலைய முனையம், வந்தே பாரத் ரயில்(Vande Bharat Express) போன்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி வரவேற்கவுள்ளார் என்று தகவல் வெளியாகிய நிலை தற்போது ஓ.பன்னீர்செல்வமும் வரவேற்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் பிரிந்திருக்கும் நிலையில், இரண்டு பேரையும் சமமாகவே பாஜக அணுகி வருகிறது. பல்வேறு சட்டப் போராட்டங்களை கடந்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் ஓபிஎஸ்க்கு பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக இன்னும் அவரை கைவிடவில்லை என கூறப்படுகிறது. பாஜக நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஓபிஎஸ்க்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. கடந்த முறை காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோரை இணைத்து வரவேற்பைப் ஏற்றுக்கொண்டார்.

ஆரம்பத்தில் இருந்து ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்படுங்கள் என்ற பாஜக மேலிடத்தின் அறியுறுத்தலை எடப்பாடி பழனிசாமி மறுத்து வந்தார். அப்போது இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு தரப்பும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட போதும் இரண்டு தரப்புக்கும் மறுக்கப்பட்டது. ஆனால் அமித்ஷாவை இரண்டு தரப்பும் சந்தித்துள்ளனர். இரண்டு தரப்பையும் சம அளவில் வைத்தே அமித்ஷா கையாண்டார். ஆனால் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அமித்ஷா முக்கியத்துவம் அளித்துள்ளார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி கடந்த முறை இரண்டு பேரையும் இணைத்து வைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டது போல இந்த முறையும் இணைத்தே ஏற்றுக்கொள்வார் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு தரப்பும் தனியாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் யாரும் நேரம் ஒதுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.