ETV Bharat / state

ஒளி, ஒலி அமைப்பு தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க வேண்டி வட்டாட்சியரிடம் மனு - Chennai district News

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரி ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

sound service workers protest
sound service workers protest
author img

By

Published : Aug 5, 2020, 10:28 PM IST

சென்னை தாம்பரத்தை அடுத்த வட்டாட்சியர் அலுவலக வாசலில் தாம்பரம், பல்லாவரத்தைச் சேர்ந்த ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றாகக் கூடி தங்கள் கோரிக்கைகளை மனுக்களாகக் கொடுத்தனர். அதில், ”ஊரடங்கால் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துவருகின்றனர்.

எனவே, ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களைக் காக்கக்கோரி குறைந்தபட்ச நிவாரணத் தொகையான 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். சில தளர்வுகள் அளித்து எங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.