ETV Bharat / state

70 விழுக்காடு மானியத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்புசெட்டுகள் - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Jul 23, 2020, 10:39 AM IST

சென்னை: 70 விழுக்காடு மானியத்தில் சூரியசக்தி பம்புசெட்டுகள் வழங்குவதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

70 விழுக்காடு
70 விழுக்காடு

70 விழுக்காடு மானியத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்புசெட்டுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது இது தொடர்பாக வேளாண்மைத் துறை நேற்று (ஜூலை 22) வெளியிட்ட அறிவிப்பில், மின் இணைப்பு இல்லாமலேயே, சூரியசக்தி பம்புசெட்டு மூலம் பகலில் சுமார் 8 மணிநேரம் தடையில்லாமல் பாசனத்திற்கு மின்சாரம் பெறமுடியும்.

தமிழ்நாடு அரசு 2013-14ஆம் ஆண்டு முதல் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு மானியத்தில் நிறுவிவரும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை, 4,826 விவசாயிகளின் வயல்களில் சூரியசக்தி மோட்டார் பம்புசெட்டுகள் நிறுவப்பட்டு, பயனடைந்து வருகின்றனர். நடப்பு 2020-2021ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் (PM- KUSUM) கீழ், முதற்கட்டமாக 1,085 விவசாயிகளின் வயல்களில் சூரியசக்தி பம்புசெட்டுகள் அமைப்பதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதில், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை தந்து, 511 பம்புசெட்டுகளுக்கு ரூ.12.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பம்புசெட்டின் மொத்தத் தொகையில் அரசு வழங்கும் 70 விழுக்காடு தவிர, மீதமுள்ள 30 விழுக்காடுத் தொகையினை விவசாயிகள் தங்களின் பங்களிப்பாக வழங்கவேண்டும். பல்வேறு குதிரைத்திறன் கொண்ட பம்புசெட்டுகளின் விலைவிவரம் இத்திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையிலான பம்புசெட்டுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.

பம்புசெட்டுகளின் விலைவிவரம்மொத்தவிலை (ரூ)விவசாயிகளின் பங்களிப்பு (ரூ)
5 hp AC ரூ.2,37,947/- ரூ.71,384/-
5 hp DC ரூ.2,42,303/- ரூ.72,691/-
7.5 hp AC ரூ.3,16,899/- ரூ.95,070/-
7.5 hp DCரூ.3,49,569/-ரூ.1,04,871/-
10hp AC ரூ.4,37,669/- ரூ.1,31,301/-
10hp DC ரூ.4,39,629/-ரூ.1,31,889/-

மொத்த விலை என்பது சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டை நிறுவுவதற்கான செலவு, வரிகள், 5 ஆண்டு பராமரிப்பு மற்றும் காப்பீடு செலவுகளை உள்ளடக்கியதாகும். இதுவரை இலவச மின் இணைப்பு இல்லாத நீர் ஆதாரங்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனையுடன் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டிற்கு இத்திட்டத்தின் கீழ், 70 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) மூலம் இலவச மின் இணைப்புக்கோரி ஏற்கனவே விவசாயிகள் விண்ணப்பித்திருந்தால், அவர்களுடைய மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை (normal priority) வரும்பொழுது, சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சக்தியை அரசு மின்கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தை வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வழங்கவேண்டும்.
  • இதுவரை இலவச மின் இணைப்புக்கோரி விண்ணப்பிக்காத விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் 70 விழுக்காடு மானியத்தில் சூரியசக்தி பம்புசெட்டினை பயன்பெற விரும்பினால், இலவச மின் இணைப்புக்கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவுசெய்ய வேண்டிய அவசியமில்லை.
  • இத்திட்டத்தின் கீழ் நிறுவப்படும் சூரிய சக்தி பம்புசெட்டுகளை அரசு மின்கட்டமைப்புடன் இனிவரும் காலங்களில் இணைத்திட விரும்பினால், விவசாயிகள் இலவச மின் இணைப்புக்கோரி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
  • பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தி பம்புசெட்டுகளை அமைத்திட விரும்பும் விவசாயிகள், விண்ணப்பம் அளிக்கும் பொழுது, சூரிய சக்தி பம்புசெட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்து பாசனம் மேற்கொள்வதற்கான உறுதிமொழியையும் அளித்திடவேண்டும்.
  • ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளிலிருந்து 200 மீட்டருக்குள்ளும், காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள்ளும், நிலத்தடிநீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்று, சூரியசக்தி பம்புசெட்டு அமைக்கும் விண்ணப்பத்துடன் இணைத்திடவேண்டும்.

    அணுகவேண்டிய முகவரி

சூரியசக்தி பம்புசெட்டு நிறுவவிரும்பும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை வருவாய் கோட்ட உதவிசெயற்பொறியாளர் (அல்லது) மாவட்ட செயற்பொறியாளர், அலுவலகங்களை தொடர்புகொண்டு, விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பான விவரங்களை பெற 044-29515322, 29515422, 29510822, 29510922 அல்லது மின்னஞ்சல் aedcewrm@gmail.com மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.

இதையும் படிங்க:’இஞ்சி, பூண்டுதான் பூச்சிக்கொல்லி... மாட்டுச் சாணம், கோமியம்தான் உரம்’ - இயற்கை விவசாயம் செய்து பிரமிக்க வைக்கும் தம்பதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.