சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறித்து பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த அதிமுக ஆட்சியில் விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஒரு சில டாஸ்மாக் கடைகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வருகிறது. சென்னை திருமுல்லைவாயல், அண்ணனூர் உள்ளிட்டப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடை பணியாளர்கள் காலை 6 மணி முதலே மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஷட்டர்களை மூடிவிட்டு அதிக விலைக்கு மது விற்பனையும் செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மதுப்பிரியர்களின் ஆர்வம் காரணமாக டாஸ்மாக் கடைகள் அரசு விதியை மீறி விற்பனைகளை செய்வதுடன் அதிக விலைக்கு கொடுத்து வருகின்றனர். உடனடியாக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முதல் திருமணத்தை மறைத்து 2 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்: முதல் மனைவி புகார்