ETV Bharat / state

Tasmac Bar: மூடப்பட்ட டாஸ்மாக் பார்கள்.. ஓப்பன் பார்களான தெருக்கள்.. வேதனையில் தவிக்கும் பெண்கள்! - TN Tasmac Bar

சென்னையில் பரவலாக திறந்தவெளி டாஸ்மாக்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுபிரியர்களால் பொது மக்களுக்கு இடையூறும் அதிகரித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூடிய டாஸ்மாக் பார்களால் தெருவுக்கு வந்த குடிமகன்கள்

author img

By

Published : Jun 18, 2023, 9:18 PM IST

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 640 சில்லறை மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் பார்கள் விதிமுறை மீறல்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால் அனைத்து பார்களும் மூடப்பட்டுள்ளது.

எனவே மதுபானக்கடைகள் காலை 12 மணிக்கு திறந்தவுடனேயே மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், பார்கள் மூடப்பட்டுள்ளதை தெரிந்து கொண்ட மதுபிரியர்கள், டாஸ்மாக் கடைக்கு வரும்பொழுதே தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்கள் மற்றும் அவர்களுக்குத் தேவையானதைக் கொண்டு வருகின்றனர்.

பிறகு, மது பாட்டில்கள் வாங்கியவுடன் மதுக்கடைகளுக்கு முன்போ அல்லது திறந்த வெளிகளிலோ மது அருந்திவிட்டு பாட்டில்களை அந்த இடத்திலேயே வீசி எரிந்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாய நிலையும் அதிகரித்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியில் பெரும்பாலான இடங்களில் எங்கு பார்த்தாலும் காலி மதுபாட்டில்களாகவே காட்சி அளிக்கிறது.

திறந்தவெளி மைதானங்கள், பிரதான சாளைகள் , சுற்றுலா மாளிகை, பேருந்து நிலைய வளாகங்கள், பல்வேறு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பாதசாரிகள் நடைபாதை, சாலையோரம் என பொதுமக்களின் உபயோகத்திற்குப் பயன்படும் அனைத்து இடங்களில் எங்கு பார்த்தாலும் மதுபான பார் போல, குடிமகன்கள் நின்று கொண்டு மது அருந்துவதைக் காண முடிகிறது. எங்கெங்கு காலி இடங்கள் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நின்று கொண்டு மது அருந்தும் வழக்கம் பரவலாக சற்று அதிகரித்தே காண முடிகிறது.

அதிலும் 24 மணி நேரமும் மது அருந்துகிறார்கள். சாலையில் பெண்கள், ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் மதுபிரியர்கள் மது அருந்துகிறார்கள். இதனால் சாலையில் செல்பவர்கள் முகம் சுளித்தவாறு செல்வதை காண முடிகிறது. இது போக சில நேரங்களில் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபடுவது, சாலையோரங்களில் அரைகுறை ஆடைகளுடன் படுத்துக்கிடப்பது போன்றவற்றாலும் அந்த வழியாகச் செல்பவர்கள் மன சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,“தற்போது மது அருந்துவது சர்வ சாதாரணமாகி விட்டது. பொதுவிடங்களில் குடித்து விட்டு மதுபாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்கிறார்கள். இதனால் பொது இடங்களுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் பாட்டில்களை உடைத்தும் போட்டு விடுகிறார்கள். இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களின் காலில் குத்தி காயம் ஏற்படுகிறது. மேலும் மதுபான பார்களை தவிரத் திறந்த வெளியில் மது அருந்துவதற்குத் தடை விதிப்பதோடு, அவ்வாறு மது அருந்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்" எனத் தெரிவித்த அவர்கள் காவல் துறையும் இதனைக் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் பெரும்பாலான சில்லறை மதுக்கடைகள் பிரதான சாலைகளில் அமைந்துள்ளதால், மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு மது பாட்டில்களைச் சாலைகளில் செல்லும் வாகனங்களின் மீதும், பொது மக்களின் மீதும் வீசுவது வாடிக்கையாகி விட்டது. இது குறித்து ஒரு டாஸ்மாக் விற்பனையாளர் கூறும் போது,“மதுக்கடைக்கு வரும் மதுபிரியர்கள் மது பாட்டில்களை வாங்கியவுடன் அவர்களை அங்கிருந்து உடனடியாக போக அறிவுறுத்தினால், மறுபடியும் எங்களது கடைக்கு வர மாட்டார்கள். இதனால் மதுபான கடைக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே குடிகாரர்களை இங்கேயே மது அருந்த அனுமதிக்கிறோம்" என தெரிவித்தார்.

சில பார்கள், பொருட்களை விற்பனை செய்யாவிட்டாலும், மது அருந்துபவர்களை அனுமதிக்கிறது. இதனால் மதுபிரியர்கள் வெளியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி கொண்டு இந்த பார்களில் மது அருந்துகின்றனர். இது குறித்து, சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க பொதுச்செயலாளர் க. திருச்செல்வன், நம்மிடம் கூறும்போது, "தமிழகத்தில் பார் ஒப்பந்தப்புள்ளி தெளிவான அடிப்படையில் முறையாக நடந்திருந்தால், இது போன்ற பிரச்சினைகள் நடந்திருக்காது. தமிழக அரசும் டாஸ்மாக் துறையும் இந்த பிரச்சினையைத் தீர்த்து வைத்தால் மட்டுமே, மதுபிரியர்கள் திறந்த வெளியில் குடிக்க மாட்டார்கள்" என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.