ETV Bharat / state

காவல் ஆணையர் அலுவலகத்தில் பிடிபட்ட பாம்பு...! - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிடிபட்ட பாம்பு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மரங்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது பாம்பு ஒன்று பிடிபட்டது.

Snake issue  chennai news  chennai latest news  chennai snake issue  Snake  Snake caught in the office of the Commissioner of Police in chennai  Snake caught  office of the Commissioner of Police  commissioner office  காவல் ஆணையர் அலுவலம்  சென்னை காவல் ஆணையர் அலுவலகம்  காவல் ஆணையர் அலுவலகத்தில் பிடிபட்ட பாம்பு  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிடிபட்ட பாம்பு  பாம்பு
பிடிபட்ட பாம்பு...
author img

By

Published : Aug 3, 2021, 9:41 PM IST

சென்னை: வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில், பாதுகாப்புப் பிரிவு காவலர்கள் இருக்கக்கூடிய பகுதியில் அமைந்திருந்த மரம் ஒன்று விழுந்தது.

மரம் விழுந்து 1 ஆண்டு காலமாகியும், மரத்தை அகற்றாமல் கிடப்பில் போட்டதால், அவ்விடத்தில் விஷப் பூச்சிகளும், பாம்புகளும் தேக்கமடைந்தன. இதனால் பணிபுரியக்கூடிய பாதுகாப்புப்பிரிவு பெண் காவலர்கள் அச்சத்திலேயே இருந்தனர்.

பிடிபட்ட பாம்பு...

பிடிபட்ட பாம்பு

இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற காவலர் நலப்பிரிவு உதவி ஆணையர் அரிகுமார், மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக வனத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த வனத்துறை காவலர் ஜெய் வினோத், 6 அடி நீளமுள்ள பாம்பை சாதாரணமாகப் பிடித்து பையினுள் போட்டார். பின்னர் பிடித்த பாம்பை வனத்துறையினர் வனப்பகுதிக்குக் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.