ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல்
ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மூலம் 84ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 87ஆயிரத்து 422 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது. இவை கடந்த ஆண்டை காட்டிலும் ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக வசூலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா புறப்படும் ராஜ்நாத் சிங்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (செப்.3) ரஷ்யா புறப்படுகிறார். இந்தியா சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா பிறந்த தினம்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 ஓவர்களில் விளையாடியுள்ளார். அண்மையில் இவருக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது அளித்தது குறிப்பிடத்தக்கது.
கடன் தவணை மீதான வட்டி ரத்து
கரோனா காலத்தில் வங்கிக் கடனை திருப்பி செலுத்துவதற்கான மாதத் தவணையின் வட்டிக்கு வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடன் தவணை உரிமை காலத்தை இரண்டு ஆண்டிற்கு நீட்டிக்க முடியும் என்று தெரிவித்தது. மேலும், வட்டிக்கு வட்டி செலுத்தும் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க விரைவில் முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் இன்று (செப்.2) விசாரணை நடக்கிறது.
வியட்நாமின் சிற்பி ஹோ சி மின்
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி கம்யூனிச வியட்நாம் நாட்டின் போராளி ஹோ சி மின் இறந்த தினம் இன்று. வடக்கு வியட்நாமின் பிரதமர் பதவியும் வகித்துள்ளார். அங்கிள் ஹோ என அழைக்கப்பட்ட ஹோ சி மின் பேசத் தொடங்கி விட்டாலே மக்கள் கண்ணீர் விட தொடங்கி விடுவார்கள்.
ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண்
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகரான பவன் கல்யாண் இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டுள்ள இவரை அவரது ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். நடிப்பது மட்டுமல்லாமல் ஜனசேனா கட்சியை தொடங்கி முழு நேர அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார்.
போக்கோ எக்ஸ்3 என்எப்ஃசி மாடல் வெளியீட்டு தேதி
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 என்எப்ஃசி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 7ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஸ்மார்ட்போன் மாடல் குறித்து டீசராக வெளியிட்டது. இது முந்தைய போக்கோ எக்ஸ்2 மாடலின் மேம்பட்ட வசதிகள் நிறைந்த ஸ்மார்ட் போனாக அமையும்.