ETV Bharat / state

பயணிகள் இல்லாததால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து! - இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து

போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் இரு சர்வதேச விமானங்கள் உட்பட 6 பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.

சென்னை விமானநிலையம்
chennai airport
author img

By

Published : Jun 8, 2023, 5:33 PM IST

சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் இன்று புறப்பட வேண்டிய இரண்டு சர்வதேச விமான சேவைகள் உள்பட ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன் விபரங்கள்: அதிகாலை 5:15 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மற்றும் மாலை 3:40 மணிக்கு, சென்னையில் இருந்து சீரடி புறப்பட வேண்டிய ஸ்பைஜெட் விமானம், மாலை 4:05 மணிக்கு, சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்ல வேண்டிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், திருவனந்தபுரத்திலிருந்து பயணிகளுடன் காலை 8:35 மணிக்கு, சென்னை வரவேண்டிய விமானமான இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3:05 மணிக்கு பயணிகளுடன் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து, சென்னை வர வேண்டிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 6:45 மணிக்கு சீரடியில் இருந்து, சென்னைவர வேண்டிய விமான சேவையான ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் விமானம், ஆகிய 6 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில் சர்வதேச விமான சேவைகளான பிரிட்டிஸ் ஏர்வேஸ் மற்றும் ஏர் அரேபிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறை முடிந்து விட்டதால், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் ஆறு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள விமானங்களில் பயணம் செய்வதற்கு மிகவும் குறைந்த அளவு பயணிகளே முன்பதிவு செய்திருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் போதிய பயணிகள் பயணம் செய்ய இல்லாத காரணத்தினால் ஆறு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, முன்னதாகவே தகவல் தெரிவித்து, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு விமானங்களில், நான்கு விமானங்கள் உள்நாட்டு விமானங்கள். இரண்டு விமானங்கள் சர்வதேச விமானங்கள், என்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீண்டும் இந்த விமான சேவைகள் பயணிகள் பயணம் செய்ய போதுமான அளவிற்கு இருந்தால் விமான சேவை மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு இந்த அறிவிப்பானது மிகுந்த மன வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.