ETV Bharat / state

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: சேலம், நாமக்கல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை
சென்னை வானிலை
author img

By

Published : Sep 15, 2020, 8:52 PM IST

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை செப்டம்பர் 15ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய ஆந்திர கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை கேரள, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.