ETV Bharat / state

‘நெல்சன் மீது நம்பிக்கையை விட அன்பு அதிகமாக இருக்கிறது’ - சிவகார்த்திகேயன் - நெல்சன்

டாக்டர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், நெல்சன் மீது தான் வைத்திருக்கும் அன்பினை நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளார்.

doctor film  press conference  press meet  sivakarthikeyan  doctor movie  sivakarthikeyan doctor film press conference  doctor movie release date  செய்தியாளர்கள் சந்திப்பு  டாக்டர்  சிவகார்த்திகேயன் டாக்டர் படம்  நெல்சன்  டாக்டர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு
டாக்டர்
author img

By

Published : Oct 2, 2021, 8:22 AM IST

சென்னை: 'கோலமாவு கோகிலா' பட வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டாக்டர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், நெல்சன், அர்ச்சனா, வினய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நம்பிக்கையை விட அன்பு அதிகம்

இதில் பேசிய நெல்சன், “வழக்கமான சிவகார்த்திகேயன் மாதிரி அல்லாமல் இதில் அவரை வேறுபடுத்திக்காட்ட முயற்சித்துள்ளோம். நான் நினைத்தது படத்தில் வந்துள்ளது. தயாரிப்பாளராகவும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இப்படம் பல்வேறு தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி” என்றார்.

இவரை தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், “கல்யாண வயசு வெற்றியால் எனக்கும் பாடல் எழுத தெரியும் என்று நம்பிக்கை வந்தது. சினிமாவில் என்னை காமெடியனாக அறிமுகப்படுத்த நினைத்தார். அது நடக்கவில்லை. நெல்சன் மீதுள்ள மரியாதையால் கனா படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு அவரது பெயரை வைத்தேன். நெல்சன் மீது நம்பிக்கையை விட அன்பு அதிகமாக இருக்கிறது” என்று நெல்சன் மீது தான் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, தனக்கு கிடைத்த இந்த வரவேற்பை பெரிய ஆசீர்வாதமாக பார்ப்பதாக பிரியங்கா மோகன் தெரிவித்தார். இப்படத்தில் நடித்திருந்த ரெடின் கிங்ஸ்லே பேசும்போது அப்படியே பீஸ்ட் படம் குறித்து பேச ஆரம்பித்ததும் நெல்சன் அவரை பார்த்து முறைக்க பேச்சை நிறுத்திக்கொண்டார். இதனால் சிறிது நேரம் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: ரசிகர்களை தன்வசம் மய்யம் கொள்ளவைக்கும் அடா சர்மா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.