ETV Bharat / state

சிம்பு பிறந்தநாள்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு 'பத்து தல' கம்பேக் - சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான சிலம்பரசன் இன்று தனது 35ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையடுத்து அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வெளியான “ பத்து தல” கிளிம்ப்ஸ் வீடியோ

author img

By

Published : Feb 3, 2022, 9:00 AM IST

Updated : Feb 3, 2022, 10:20 AM IST

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனும் டி. ராஜேந்திரன் மகனுமான சிலம்பரசன் இன்று (பிப்ரவரி 3) தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பல தோல்வி படங்களுக்கு அடுத்து மெகா வெற்றியைக் கொடுத்த மாநாடு படத்திற்குப் பிறகு அவர் கொண்டாடும் பிறந்த நாள் இதுவாகும்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு ‘பத்து தல’ கம்பேக்

காதல் அழிவதில்லை படத்தில் கதாநாயகனாகத் தொடங்கிய சிம்புவின் திரைப்பயணம் அசாத்தியமானது. தந்தையின் படங்களில் நடித்து சிறு வயதிலேயே ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைப் பெற்றவர்தான் சிம்பு. தம், அலை எனக் கல்லூரி நாயகனாக வந்து பெண்களின் கனவு நாயகனாக மாறினார். கோவில் சிம்புவின் யதார்த்தமான நடிப்புக்கு ஒரு சான்றாகும்.

வல்லவன், மன்மதன் என உருகிய காதல் கதாபாத்திரங்களினாலும் சிலம்பாட்டம் போன்ற மாஸ் ஸ்டோரிகளிலும் கச்சிதமாக நடித்தார்.

விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக்காக வந்து ஓ சோனா என்று உருகி ரசிகர்களையும் உருகவைத்து பாலச்சந்தரிடமே பாராட்டு வாங்கினார். இடையில் அச்சம் என்பது மடமையடா, இது நம்ம ஆளு என என்ட்ரீ கொடுத்தாலும் சிறந்த படம் என்று சொல்லும் வகையில் வெற்றி அடையவில்லை.

சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி சிம்புவின் ரீ-என்ட்ரீயான மாநாடு சிறந்த கம்பேக்காகும். அதிக உடல் எடையிலிருந்து குறைந்து முற்றிலும் புதிய மாஸான கிளாஸான லுக்கில் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது.

பர்த்டே டீரிட் ‘பத்து தல’

சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் பத்து தல படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ பட இயக்குநர் ஒபிலி என். கிருஷ்ணன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கலையரசன், கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படக் குழுவினர் 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஏஜிஆர் (AGR) என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள அப்டேட்டுகள் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் டீரிட்டாக அமைந்துள்ளது.

வெங்கட்பிரபு ட்விட்டரில் வாழ்த்து

மாநாடு திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் மாநாடு BGM உடன் ஒரு Motion வீடியோவை பகிர்ந்து உங்களது நேரம் மீண்டும் தொடங்கிவிட்டது. பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'காத்து வாக்குல ரெண்டு காதல்' டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Last Updated : Feb 3, 2022, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.