சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் காலனிப் பகுதியில் வசித்து வருபவர் அண்ணாதுரை. சித்த மருத்துவரான இவர், தனது வீட்டில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது கிளினிக்கிற்கு ஆறு மாதத்திற்கு முன்பு ராஜேஷ் என்பவர் மஞ்சள்காமாலை நோய் தொடர்பாக வந்து சித்த மருத்துவச் சிகிச்சை பெற்ற பின்பு குணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மகப்பேறு சிகிச்சைக்காக தன் மனைவி லாவண்யாவை அண்ணாதுரையிடம் அழைத்துவந்து இருவரும் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று புதிய ஆயுர்வேத மருந்து வந்துள்ளதாகவும், லாவண்யாவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறும் ராஜேஷிடம் அண்ணாதுரை கூறியுள்ளார்.
இதனால், அண்ணாதுரை கிளினிக்கிற்கு லாவண்யா சென்றுள்ளார். அப்போது, அவரிடம் அண்ணாதுரை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, லாவண்யா கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து தலைமறையிருந்த சித்த மருத்துவர் அண்ணாதுரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நாளை களம் இறங்கும் பாரத் பாண்ட் இ.டி.எஃப்!