சென்னை: மதுரவாயலைச் சேர்ந்த சத்தியபிரகாஷ் (37) என்ற குறும்பட இயக்குநர், சென்னையைச் சேர்ந்த பள்ளி சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பழகியுள்ளார். சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி, நடிப்பு பயிற்சி அளிப்பதாகக் கூறி, வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், 2021ஆம் ஆண்டு சத்தியபிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி இன்று (ஆக.31) விசாரித்தார். காவல் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.
பின்னர், வாதங்களை கேட்ட நீதிபதி ராஜலட்சுமி, சத்திய பிரகாஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் 55 ஆயிரம் ரூபாயை சிறுமிக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, உடல் மற்றும் மன ரிதியான பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:போலி இ-சலான் மோசடி: மக்களை எச்சரிக்கும் காவல் துறை.. அசல் மற்றும் போலி இடையே உள்ள வித்தியாசம் என்ன?