இலவச கட்டாயக் கல்வி உரிமைச் திட்டத்தின் கீழ் 2019-20ஆம் கல்வியாண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே18ஆம் தேதி வரை 1,20,989 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பின் விண்ணப்பத்தில் தகுதியானவைகள் ஆய்வுசெய்து தரம் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதியுள்ளவைகளாக கண்டறிந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 6) அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். குலுக்கலானது பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளியின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
சேர்க்கை முடிந்த பின்னர் மாணவர்களின் விபரத்தை முதன்மைக் கல்வி அலுவலர்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதனடிப்படையில் இன்று (ஜூன் 6) 5000 பள்ளிகளில் உள்ள 70 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பித்திருந்த 83 ஆயிரம் மாணவர்களில் யாரை சேர்ப்பது என்பது குறித்து குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நடைபெறுகிறது.