சென்னை ஆதம்பாக்கம் பெரியார் நகரில் 11க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. வங்கக் கடலில் உருவான நிவர் புயலின் காரணமாக கடந்த இரு தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் பெரியார் நகரில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. இந்த மழைநீர், அங்குள்ள கால்வாய் அடைப்பு எற்பட்டதால் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.
தொடர்ந்து கனமழை பெய்துவரும் சூழலில், வீடுகளில் தேங்கிய மழைநீருடன் கூடிய கழிவுநீரை வீட்டு உரிமையாளர்கள் கைகளால் வெளியேற்றி வருகின்றனர். உடனடியாக கால்வாய் அடைப்பை மாநகராட்சி அலுவலர்கள் சரிசெய்ய வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: தீயணைப்பு வீரர்கள் நாகைக்கு வருகை