சென்னை: சென்னையிலிருந்து பெங்களூரு, மைசூரு, திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து தான் முக்கிய போக்குவரத்தாக பார்க்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 100க்கு மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில், ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் விரைவு வண்டி, பயணிகள் ரயில்கள் அனைத்தும் அடங்கும்.
சென்னை சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து முக்கிய வழித்தடமானது சென்னை - பெங்களூரு ரயில் தடம் உள்ளது. இந்த ரயில் தடத்தில் பெங்களூரு, மைசூரு, திருப்பதி (ரேணிகுண்டா வழித்தடம்) ஆகிய இடங்களுக்கு தினமும் 10 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், தற்போது, தென்மேற்கு ரயில்வே துறை சார்பில், ஜோலார்பேட்டை- கே.எஸ்.ஆர் பெங்களூரு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை - சோம நாயக்கன்பட்டிக்கு இடையே சுரங்கப் பாதை பணியின் காரணமாக 14 விரைவு ரயில்கள் தற்காலிமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மேற்கு ரயில்வே தனது ரயில்வே அட்டவணையில், பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டிக்கு இடைய சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து கர்நாடகா வரும் ரயில்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து பெருங்களூரு, மைசுரு, திருப்பதி ஆகிய ரயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் எ.வ.வேலு பேட்டி!
- சென்னை-திருப்பதி: சென்னையிலிருந்து திருப்பதிக்கு - திருவள்ளூர், திருத்தணி மார்க்கமாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பாதையில் பணிகள் நடைபெறுவதால், மாலை 4.30 மணி புறப்படும் சென்னை - திருப்பதி (16203) ரயிலும் அதேப் போல் திருப்பதி - சென்னை(16204) காலை 6.25 புறப்படும் ரயிலும், செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை-பெங்களூரு: சென்னையில் இருந்து கே.எஸ்.ஆர் பெங்களூருவிற்கு இரவு 10.50க்கு புறப்படும் அதிவிரைவு வண்டி(12657) என்ற ரயிலும், அதேபோல் கே.எஸ்.ஆர் பெங்களூருவில் இருந்து சென்னை வரும் (12658) என்ற ரயிலும் செப்டம்பர் 14 மற்றம் செப்டம்பர் 15ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை- மைசூரு செல்லும் காவிரி விரைவு ரயிலும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டள்ளது.
- சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12657) ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு நகரங்களில் இருந்து, இந்த மார்க்கத்தில் வரும் 8 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆறு ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Subramania Bharati 102nd Anniversary: எங்குக் கிடைக்கும் ஆனந்தம்.! தேடி ஓடும் மனிதனுக்கு மகாகவியின் மகத்தான கவி.!