ETV Bharat / state

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

author img

By

Published : May 25, 2021, 3:37 PM IST

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

sexual harassment  chennai school teacher sexual harassment  minister anbil mahesh poyyamozhi
பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் மீது பள்ளிக் கல்வித்துறை சார்பாக விசாரணை நடைபெற்றது. தற்போது, காவல் துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் வகுப்புகளில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கவில்லை. மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க குழு அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுப்பது குறித்து விசாரணை செய்வதற்கு மத்திய அரசு விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பள்ளிகளில் விசாகா கமிட்டி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகங்களில் விசாகா கமிட்டி விரைவில் அமைக்கப்படும்.

'பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் விசாகா கமிட்டி விரைவில் அமைக்கப்படும்'- மகேஷ் பொய்யாமொழி

12ஆம் வகுப்புத்தேர்வுகள் நடத்துவது குறித்து வரைவு அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். இதில், உள்ள விவரங்களை மத்திய அரசிற்கு அனுப்பி விட்டு இன்று மாலை வெளியிடுவோம். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தவே அரசு திட்டமிட்டு இருக்கிறது. மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் எப்படி நடத்துவது என்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்வு கூடாது என்பது அரசின் முடிவாக இருக்கிறது. ஆனாலும், நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் ஜுன் 14 - ஜுலை 15 வரை தேர்வுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.