ETV Bharat / state

மருத்துவ பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி! - ஸ்டான்லி அரசு மருத்துவமனை

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து, இருதயவியல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நாளை(நவ.16) மாலை வரை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனை அழைத்துவரப்பட்ட செந்தில் பாலாஜி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 8:52 PM IST

சென்னை: புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மதிய உணவிற்கு பின்னர், தொடர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பலத்த பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு பின்னர் இருதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது மருத்துவ பரிசோதனைக்காக புழல் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார்.

அமலாக்கத்துறை சோதனையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மாத காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு ஜூலை மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் புழல் சிறையில் உள்ள மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்ததால், கடந்த மாதம் சில நாட்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவர்கள் குழு அவரை முழு பரிசோதனை செய்து உடல்நலம் சீரான பின்பே மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மீண்டும் புழல் சிறையிலிருந்து வண்ணாரப்பேட்டையில் இருக்கும் ஸ்டாண்லி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை காவலர்களின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனைக்குப் பின்னர், தொடர்ந்து இருதயவியல் பரிசோதனைக்காக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிய உணவு சாப்பிட்ட பின் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவப் பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அங்கு ரத்தம் இசிஜி உள்ளிட்ட வழக்கமான பரிசோதனைகள் செய்த பின்பு மீண்டும் நாளை(நவ.16) மாலை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் அதுவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்து நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை பெருநகர புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.