காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் யசோதா உடல் நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (டிச.27) காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் யசோதா கடந்த 3ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் யசோதா பங்கேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டு கடந்த 18ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது, அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை காங்கிரஸ் சார்பாக எம்எல்ஏ-வாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு இன்று (டிச.27) காலை 6.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக 4 மணி அளவில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட உள்ளது.அங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன் பிறகு அவரது உடல் சென்னை டிஜிபி அலுவலகம் அருகில் அமைந்துள்ள கிருஷ்ணாம்பேட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.இவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை காங்கிரஸ் சார்பாக எம்எல்ஏ-வாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கட்சி சார்பில் 1980, 1984, 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகள் என நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு பெற்றவர் டி.யசோதா.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யசோதா அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு துணை தலைவராகவும், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். தற்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் உறுப்பினராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் யசோதா காலமானார் இதையும் படிங்க: இந்தியாவில் 1 கோடியே 2 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்புகள்