ETV Bharat / state

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் தமிழகத்தில் அமலில் உள்ளது - தமிழ்நாடு அரசு தகவல்!

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 9, 2023, 12:57 PM IST

சென்னை: பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக்கோரி சி.குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ''தங்கள் குழந்தைகளுக்காக வாழும் பெற்றோர்கள் வயதான காலத்தில் அநாதைகளாக பிள்ளைகளால் துரத்தப்படுவதும், வயதான காலத்தில் சாலை ஓரங்களில் பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கைக்கும் தள்ளப்படுகின்றனர். இதனால், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மத்திய அரசின் தேசியக் கொள்கைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தி, மூத்த குடிமக்களுக்கு அவர்களுடைய இறுதிக் காலத்தில் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நேற்று (ஜூலை 8) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ. இளைய பெருமாள், அரசு தரப்பில் ப்ளீடர் பி.முத்துக்குமார் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

இதனையடுத்து அரசு தரப்பு வாதத்தில், மூத்த குடிமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், தங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரத்தை சேகரித்து வைக்கவும், அவர்கள் ஏதேனும் புகார் அளித்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அதனை தீர்த்து வைக்கவும் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். பின்னர், இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநில அரசின் நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: கைவிடப்பட்ட தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையம்.. சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.