ETV Bharat / state

தமிழ்நாட்டில் பிஎப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும்....ஹெச்.ராஜா வலியுறுத்தல் - H Raja has urged to ban the PFI

தமிழ்நாட்டில் பிஎப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசபட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டிற்கு சென்று எச்.ராஜா ஆறுதல்

author img

By

Published : Sep 27, 2022, 11:10 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், ராஜராஜேஸ்வரி தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (63). இவர் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது வீட்டில் கடந்த 24ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா, சீதாராமன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ தமிழ்நாட்டில பல்வேறு பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடத்தியது. இது தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை. 15 மாநிலங்களில் நடைபெற்றது. இது மூன்று மாதத்திற்கு மேல் தீர ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இதுவரை 20 இடங்களுக்கு மேல் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி ஆகிய நிர்வாகிகளின் வீடுகள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆண்டவனின் அருளால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாதது நிம்மதிக்குரிய விஷயம் ஆனால் அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இதில் சிட்லபாக்கத்தில் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவர் சீதாராமன் வீட்டில் நடைபெற்று இருக்கும் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல குற்றத்தை செய்ய தூண்டுபவர்களும் குற்றவாளிகள் தான்.

பெட்ரோல் குண்டு வீசபட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டிற்கு சென்று எச்.ராஜா ஆறுதல்

அதுபோல இது போன்ற பயங்கரவாதிகளை தப்புவிப்பதற்காக தேச விரோத தீய சக்திகள் திருமாவளவன், சீமான் போன்றவர்கள் இந்த சம்பவங்களை பாஜக, இந்து அமைப்பினர் அவர்களே செய்திருப்பார்கள், என பேசுவது இதனை திசை திருப்பி இதில் சம்பந்தப்பட்டவர்களை தப்பி வைப்பதற்காக.

எனவே நமது காவல்துறையை சேர்ந்த சைலேந்திரபாபு இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள், வதந்தி பரப்பபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே அவர் சொன்னதை செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனென்றால் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த 18 பேரும் பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான், இந்து அமைப்புகள் மீது திசை திருப்பி உள்நோக்கம் கற்பித்து பயங்கரவாதிகளை தப்ப வைக்க நினைக்கும் சீமான், திருமாவளவன் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பி.எப்.ஐயை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 2024 பாராளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.